வரதட்சணை கொடுமையால் மனைவி சாவு; தண்டனை கொடுத்த அதேநாளில் ஜாமீனில் வெளியேவந்த கணவர்...

By Suresh Arulmozhivarman  |  First Published Aug 22, 2018, 7:22 AM IST

வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை செய்துகொண்டதால் கணவர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். 


நீலகிரி

வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை செய்துகொண்டதால் கணவர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். ஐந்து வருடங்களாக நடந்துவந்த வழக்கில் நால்வரும் சிறை தண்டனை பெற்ற அதேநாளில் ஜாமீனில் வெளியே வந்து வீட்டுக்குச் சென்றுவிட்டனர். 

Tap to resize

Latest Videos

undefined

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், குளிச்சோலை பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (42). தோட்ட உரிமையாளரான இவருக்கும் மஞ்சுளா என்பவருக்கும் திருமணமாகி தீரன் என்ற 9 வயது மகன் உள்ளான்.

கடந்த 2013-ஆம் ஆண்டு  ஜூலை மாதம் 23-ஆம் தேதி உதகமண்டலத்தில் ரோஸ்மௌண்ட் பகுதியில் உள்ள கோபாலகிருஷ்ணன் வீட்டில் மஞ்சுளா தூக்குப்போட்டுத் தற்கொலைச் செய்துகொண்டார். தனது மகளின் இறப்பில் மர்மம் இருப்பதாக புகாரளித்தார் மஞ்சுளாவின் தந்தை மாரிச்சாமி. 

மஞ்சுளாவை வரதட்சணைக் கேட்டு கோபாலகிருஷ்ணன், மாமீயார் உமாதேவி, நாத்தனாரகள் கவிதா மற்றும் சங்கீதா ஆகியோர் துன்புறுத்தியதால்தான் மஞ்சுளா இறந்திருப்பார் என்று உதகமண்டலம் நகர மேற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அப்புகாரின் அடிப்படையில் உதகமண்டலம் காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார். அதில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. தந்தை மாரிச்சாமி கூறியதைப் போலவே மஞ்சுளாவை வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தி அவரை தற்கொலைக்குத் தூண்டியுள்ளனர் அவரது கணவர் குடும்பத்தார்.

இதனைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ணன், உமாதேவி, கவிதா, சங்கீதா ஆகிய நால்வர் மீதும் வழக்குப்பதியப்பட்டது. இவ்வழக்கு உதகமண்டலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

கடந்த ஐந்து வருடங்களாக நடந்துவந்த இந்த வழக்கில் நேற்று நீதிபதி முரளிதரன் தீர்ப்பு வழங்கினார். அதில், "பாபு, உமாதேவி, கவிதா, சங்கீதா ஆகிய நால்வருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது" என்று தீர்ப்பளித்தார்.

ஐந்து வருட வழக்கில் தவறு செய்தவர்களுக்கு ஒருவழியாக தண்டனை கிடைத்ததே என்று நிம்மதி மூச்சு விடுவதற்குள் நடந்த சம்பவம் அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்ன நடந்தது என்று யோசிக்கிறீர்களா? தொடர்ந்து படிங்க...

தலா 20 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்த உடனேயே நால்வரும் சேர்ந்து ரூ.80 ஆயிரத்தை நீதிமன்றத்தில் செலுத்தினர். பின்னர், தண்டனை கொடுத்த நீதிபதியிடம் ஜாமீன் கேட்டு நால்வரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி நால்வருக்கும் ஜாமீன் வழங்கினார்.

தண்டனை கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே ஜாமீனில் வெளியே வந்த குடும்பத்தார் நால்வரும் நீதிமன்றத்தின் பின்பக்கத்தில் தயார் நிலையில் நின்றுக் கொண்டிருந்த காரில் ஏறி சென்றுவிட்டனர்.

click me!