ஹிந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசிய அருண் ஜெட்லி...! காரணம் இதுதானாம்..!

First Published Feb 1, 2018, 6:50 PM IST
Highlights
why arun jetley talking in english and hindi


ஹிந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசிய அருண் ஜெட்லி...! காரணம் இதுதானாம்..!

2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை 11 முதல் தாக்கல் செய்து வந்தார்.

அருண் ஜெட்லீ சென்ற வருடம் செய்த பட்ஜெட் தாக்கலை ஆங்கிலத்தில் செய்தார். ஆனால் இந்த முறை ஹிந்தியில்  செய்தார்.பின்னர் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கலந்து கலந்து பேசினார்.

அதாவது இந்தியாவின் கிராம மக்களுக்கும் பட்ஜெட் சென்று சேர வேண்டும் என அவர் இந்தியில் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்

இவ்வாறு இந்தியில் பேசியது சுதந்திர இந்தியாவில் இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் எந்த நிதி அமைச்சரும் இந்தியில் தாக்கல் செய்தது இல்லை. தொடக்கத்தில் சில ஹிந்தி பொன்மொழிகள் மட்டுமே சொல்லி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனாலும் ஹிந்தியும், ஆங்கிலமும் கலந்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசியது  இதுவே முதல் முறையாகும்.

மேலும் இந்தியாவின் தென்மாநிலங்களை விட, வட மாநிலத்தில் தான் பாஜக விற்கு   அதிக வரவேற்பு உள்ளதால், ஹிந்தி பேசும் அனைத்து பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் ஹிந்தி மொழியிலும் பட்ஜெட் தாக்கல்  செய்துள்ளார் அருண்ஜெட்லி. 

click me!