
தனியாக இருந்த மூதாட்டியிடம், திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று கூறி, மயக்க மருந்து மூலம் அவரிடம் இருந்த நகைகளை கொள்ளையர்கள் பறித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது.
எழில் நகரைச் சேர்ந்த செல்வ லெட்சுமி. இவர் இன்று காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அவரது வீட்டுக்கு ஆண் - பெண் என தம்பதி சமேதராய் இருவர் வந்துள்ளனர்.
அவர்களிடம் என்ன விஷயம் என்று செல்வலெட்சுமி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள், குடிக்க தண்ணீர் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.
இதையடுத்து செல்வலெட்சுமி, வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்துவர முயன்றார். அப்போது அவரை பின்தொடர்ந்த அவர்கள், செல்வலெட்சுமி மீது மயக்க மருந்து தெளித்து, அவர் அணிந்திருந்த 10 சவரன் தங்க சங்கிலியைப் பறித்து சென்றுள்ளனர்.
மயக்கம் தெளிந்து எழுந்த செல்வலெட்சுமி, தன்னிடம் இருந்து தங்க சங்கிலி பறிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ந்து போனார். இது குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.