நீதிபதியாக பதவியேற்ற விக்டோரியா கவுரி.! யார் இவர்.? எதிர்ப்புக்கு என்ன காரணம்.? சர்ச்சைக்குரிய கருத்து என்ன.?

By Ajmal KhanFirst Published Feb 7, 2023, 2:30 PM IST
Highlights

சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர் நீதிபதியாக பதவி ஏற்க கூடாது என வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய நிலையில், நீதிபதியாக விக்டோரியா கவுரி பதவி நியமனம் செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறத்துவிட்டது. 

உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடத்தை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து குரல் எழுந்து வருகிறது. அதற்க்கு முக்கிய காரணம் தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகள் தான். இந்தநிலையில் தான்  வழக்கறிஞர்களான விக்டோரியா கவுரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் ஆகியோரையும், மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகியோரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேரும் இன்று நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர். எப்போதும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியானால் வழக்கறிஞர்கள் வரவரேற்பார்கள் எந்த வித சர்ச்சையும் இல்லாமல் பதவியேற்பு நடைபெறும்.

ஆடு கசாப்பு கடைக்காரனை நம்பினால் என்ன நடக்குமோ, அதுதான் ஓபிஎஸ்ஐ நம்பியவர்களின் நிலை - ஜெயக்குமார் அதிரடி

யார் இந்த விக்டோரியா கவுரி

ஆனால் இந்த முறை ஒரே ஒரு நீதிபதிக்கு  பெயருக்கு மட்டும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்க்கு காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் விக்டோரியா கவுரி. தனது இளங்கலை சட்டப் படிப்பை மதுரை சட்டக் கல்லூரியில் படித்து முடித்து  கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். தற்போது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக இவர் பதவி வகிக்கிறார்.

ஈரோடு இடைத்தேர்தல்..! அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக முழு ஆதரவு- அண்ணாமலை அறிவிப்பு

சர்ச்சை கருத்து என்ன.?

வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கிய நிலையில் பாஜகவின் தீவிர ஆதரவாளராக மாறினார்.விக்டோரியா கவுரி பாஜக மகளிரணி தேசிய பொதுச் செயலாளராக பதவியையும் வகித்துள்ளார். இதனால் அக்கட்சியின் சிந்தாந்தத்தங்களை பல்வேறு இடங்களில் பேசியதாக கூறப்படுகிறது. மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் யுடியூப் பக்கத்தில், தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு பாதிப்பாக இருப்பவர் யார் என்ற கேள்வி பதில்  நிகழ்ச்சியில்,  ஜிஹாத்தா அல்லது கிறிஸ்துவ மிஷனரிகளா? என்ற தலைப்பில் விக்டோரியா தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அவருடைய கருத்தில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம்  சமூகத்திற்கு எதிராக கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே விக்டோரிய கவுரி நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள்

அதே நேரத்தில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இருந்து நீதிபதியாக ஆக உள்ளார். இதற்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வழங்கறிஞர்கள் பலர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் மதம் மற்றும் அரசியல்  சார்பின்றி நியாயமாகத் தங்களது சட்டப் பணிகளைச் செய்துள்ளனர். அவர்களைப் போல விக்டோரியாவும் செயல்படுவார் என விக்டோரியா கவுரிக்கு ஆதரவாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்கள் கொலிஜயத்திற்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்தநிலையில் தான் விக்டோரியா கெளரி நீதிபதியாக பதவி ஏற்பதை தடை செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் தடை விதிக்க  முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கவுரி.! எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
 

 

click me!