தர்மபுரியில் உறவினர்களிடையே மோதல்; அடுத்தடுத்து அரங்கேறிய இரட்டை படுகொலை

By Velmurugan s  |  First Published Feb 7, 2023, 12:55 PM IST

தர்மபுரியில் உறவினர்களிடையே இருந்து வந்த நிலத்தகராறில் அடுத்தடுத்து இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினர் இது தொடர்பாக விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகேவுள்ள ஜொல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி (60) இவருடைய மாமன் தங்கவேல் (65). தங்கவேலுவின் தங்கையை மணி திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் இருவருக்குமிடையே 20 வருட காலமாக நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சற்று மன நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தங்கவேல் தங்களது குடும்பத்தாரை விட்டு பிரிந்து ஜொல்லம்பட்டியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் பாலடைந்த  வீட்டில் குடியிருந்து வந்துள்ளார். 

இந்த நிலையில் மணி வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் தனது பேத்தியை இன்று காலை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது சிரிது தூரத்தில்  ஏற்கனவே கத்தியுடன் அமர்ந்திருந்த தங்கவேல் மணியை வழி மறித்து சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே மணி உயிரிழந்தார். பின்னர் மணியின் வீட்டில் உள்ளவர்களை வெட்டுவதற்காக கத்தியுடன் சென்றபோது எதிரே டிராக்கட்டரில் வந்து கொண்டிருந்த மணியின் மகன் சேட்டு தந்தை வெட்டப்பட்டதை பார்த்து அதிர்ந்து போய் தடுக்க செல்லவே சேட்டுவையும், தங்கவேல் காலில் வெட்டியிருக்கிறார்.

Tap to resize

Latest Videos

தர்மபுரியில் மனித கழிவுகளை வெறும் கைகளால் அள்ள வைத்து பேரூராட்சி தலைவர் அட்டூழியம் 

இதனால் ஆத்திரமடைந்த சேட்டு  பதட்டம் அடைந்து தங்கவேலு மீது டிராக்ட்டரை ஏற்றி உள்ளார். இதில் படுகாயம்மடைந்த தங்கவேலு சம்பவ இடத்திலே உயிரிழந்தார். முன்விரோதத்தால் நடந்து முடிந்த இந்த இரட்டை கொலை தொடர்பாக தகவல் அறிந்து வந்த காரிமங்கலம் காவல் துறையினர் இரண்டு பிரேதங்களையும் கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். ஜொல்லம்பட்டி பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற இரட்டை கொலையால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

click me!