
ஓபிஎஸ்ஸா? தினகரனா?
தங்க அங்கி-பரபரப்பு:
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நடப்பதை யொட்டி, அதிமுக சார்பில் அணிவிக்கப்படும் தங்க அங்கியை வங்கியில் இருந்து யார் பெறப்போவது என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது
மதுரை அண்ணா நகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் உள்ள தங்க அங்கியை பெறுவதற்காக ஓ.பன்னீர்செல்வமும்,தினகரன் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களும் வங்கிக்குள் சென்று உள்ளனர்
இதனிடையே யாரிடம் தங்க அங்கியை வழங்குவது என்பது குறித்து தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நாளை முதல் (சனி)30 ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த தங்க அங்கியை விழாவின் போது பயன்படுத்திவிட்டு பின்னர் மீண்டும் வங்கியிலேயே ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அங்கியை பெறுவதற்கு வருகை புரிந்திருக்கும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி.தினகரன் தரப்பு முன்னாள் எம்.எல்.ஏ சாமிக்கும் வாக்குவாதம் எற்பட்டு உள்ளது
ஆனால்,தினகரன் ஆதரவாளர்களை வங்கிக்குள் செல்ல காவல்துறை அனுமதி மறுத்தது....
இதனால் இரண்டு மணி நேரமாக போராடி வரும் வங்கி மேலாளர் யாரிடம் அந்த கவசத்தை தருவது என்பது தெரியாமல் குழம்பி மிகவும் டென்சனில் உள்ளாராம்