
நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில், 11 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம், தமிழக மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்க்கிறது.
பொது மக்களுக்கு போராடும் உரிமை கூட இல்லாமல் போய்விட்டதா இந்த ஜனநாயக நாட்டில்? என மக்கள் மனதில் கேள்விகளும் போராட்ட சிந்தனையும் துளிர்விட்டிருக்கும் இந்த தருணத்தில், பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் கூட தங்கள் இரங்கலையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் ஜெயம் ரவியும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆவேசமான டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ”சக மனிதனின் உயிரை பறிக்கும் உரிமையை இன்னொரு மனிதனுக்கு யார் கொடுத்தது? இப்படி அப்பாவி மக்களை கூட்டாக கொன்றிருப்பதை வன்மையா கண்டிக்கிறேன். ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என அதில் ஆவேசமாக கூறியிருக்கிறார் ஜெயம் ரவி.