காக்கி உடை அணிவதே கேவலமாக உள்ளது...! சீறிப்பாயும் நடிகை...!

 
Published : May 23, 2018, 12:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
காக்கி உடை அணிவதே கேவலமாக உள்ளது...! சீறிப்பாயும் நடிகை...!

சுருக்கம்

Khaki dress is disgusting anivate - TV Actress

காக்கி உடை அணிவதே கேவலமாக உள்ளது என்றும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட கொலை என்றும், இலங்கையில் எது நடந்ததோ அது தமிழ்நாட்டிலும் நடந்திருக்கிறது என்றும் சின்னத்திரை நடிகை நிலானி நிலா ஆவேசமாக பேசியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் தூத்துக்குடி போர்க்களமானது. துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சின்னத்திரை நடிகையான நிலானி நிலா, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகை நிலாநி நிலா, படிப்பிடிப்புக்கு நடுவே காக்கி உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், இந்த சீருடையை அணிந்திருப்பதற்கு மிகவும் கேவலமாக இருக்கிறது. அப்பாவி மக்களை சாகடித்துள்ளார்கள். சத்தியமாக நான் ஷீட்டிங்கில் இருந்தேன். என்னால தவிர்க்க முடியவில்லை. இல்லையென்றால் நான் தூத்துக்குடியில் இருந்திருப்பேன். எந்த போராட்டம் நடத்தினாலும் போலீசாருக்கு முதலில் சுடுவதற்கான அதிகாரம் கிடையாது. முதலில் தண்ணீரால் துரத்தி அடித்திருக்க வேண்டும். பின்னர் கண்ணீர் புகைக்குண்டு போட்டியிருக்க வேண்டும். அதையும் மீறி நடந்தால் ரப்பர் புல்லட்டால் காலுக்கு கீழே சுட்டிருக்க வேண்டும். இதில் எதையாவது பின்பற்றியிருக்கிறார்களா?

எடுத்த எடுப்பிலேயே நெஞ்சில் குறி வைத்து சுடுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. துப்பாக்கிச் சூட்டில் இறந்த 8 பேர், இந்த போராட்டத்தை ஆரம்பித்து வழி நடத்தி வந்தவர்கள். ஆகையால் இது திட்டமிட்ட கொலை. போராட்டத்தின்போது தற்செயலாக நடந்தது இல்லை. இன்று அவர்கள், நாளை நாம்தான். இதை யாருமே கேட்கவில்லையென்றால் நாம் நல்லாயிருப்போமா என்றால் கண்டிப்பாக கிடையாது...! நமது வளங்களை சுரண்டிவிட்டார்கள்... நீரை சுரண்டிவிட்டார்கள்... நம் மண்வளம் உள்பட எதுவும் நம்மிடம் இல்லை.
 
நம்மை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். போராளிகளாக, தீவிரவாதிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள், காரில் சொகுசாக போகிறவர்களெல்லாம் கீழே இறங்கி வாங்க. உங்களோட வாழ்க்கைக்கும் சேர்ந்துதான் நாங்களெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இலங்கையில் என்ன நடந்ததோ அது தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. இன்னொரு பாலச்சந்திரனையும், இசைப்பிரியாவையும் இழக்க வேண்டாம் என்று நடிகை நிலானி நிலா காட்டமாக அதில் பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

டிடிவி, ஓபிஎஸ் உடன் கூட்டணி பேச்சு., அதிமுகவில் இருந்து பலரும் தவெக வருவார்கள்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
Tamil News Live today 25 December 2025: வெற்றிமாறனின் சிஷ்யன் இயக்கிய படம்... சிறை சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ