"ஜெ" சமாதிக்கு சென்றால் பதவி இழக்கப்படுகிறதா..? என்ன சொல்கிறது ஜெ ஆத்மா?

 
Published : Mar 24, 2017, 11:15 AM ISTUpdated : Sep 19, 2018, 03:04 AM IST
"ஜெ"  சமாதிக்கு சென்றால்  பதவி இழக்கப்படுகிறதா..? என்ன  சொல்கிறது  ஜெ ஆத்மா?

சுருக்கம்

who are all going for jayalalithaa samaathi that person may lost their rol

தமிழகத்தை  பொறுத்தவரையில், முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின்  மறைவிற்கு பிறகு பல  மாற்றங்கள்  வந்துக் கொண்டே  இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் அரசியல் திருப்பங்கள் என  பல  நிகழ்வுகள் நடந்துக்கொண்டே இருக்கிறது.

 இதற்கிடையில் ஜெயலலிதாவின்  நினைவிடத்திற்கு சென்று வணங்கினால்,  ஏதாவது  ஒன்றை  பறிகொடுத்து விடுவதாக  சமூகவலைத்தளங்களில்  பரவலாக பேசப்பட்டு  வருகிறது . அதற்கேற்றார் போல்,

பன்னீர்  செல்வம், ஜெயலலிதாவின் சமாதிக்கு  சென்று தியானம் செய்த பின்னர் அவரது  முதல்வர்  பதவியை  எடப்பாடி  பழனிசாமியிடம் பறிகொடுத்தார்.

சசிகலாவும் ஜெயலலிதாவின்  சமாதிக்கு  சென்று வணங்கிய பின், பெங்களூரு  சிறைக்கு சென்றார்.

தினகரன்  ஜெயலலிதாவின்  சமாதியை  வணங்கிய பின், அதிமுகவின்  அடையாளமான  இரட்டை இலை சின்னத்தையும்  இழந்தார், அதிமுக  என்ற கட்சி  பெயரை கூட பயன்படுத்தகூடாத  நிலை  ஏற்பட்டுள்ளது

 இதே  போன்று  ஜெயலிதாவின்  அண்ணன் மகள் தீபா தன் அத்தையான ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று   வணங்கிய  பின் தன்  கணவர்  மாதவனை  பிரிந்தார் . இது போன்று ஒவ்வொருவரும், தங்களுடைய  பதவியையோ அல்லது வேறு ஏதாவது ஒன்றோ  இழக்க  நேரிடுகிறது  என பரவலாகவே  மக்கள்  பேசிவருகிறார்கள் .

இது போன்ற கருத்துக்களை  சமூகவலைதளங்களிலும்  பதிவிட்டு வருகிறார்கள். இதற்கு  என்ன காரணமாக இருக்கும் ? ஜெயலிதாவின் ஆத்மா  தான்  இப்படி  செய்ய  வைக்கிறதோ என்னமோ  என  சிலர்  கருத்து  கூறி  வருகின்றனர் .

PREV
click me!

Recommended Stories

நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் விடுமுறை! ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
Tamil News Live today 23 December 2025: ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப் ஆன கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்