மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஓராண்டு நினைவை ஒட்டி, சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் துணை முதல்வர் உட்பட அனைத்து அமைச்சர்களும் மலர் வளையம் வைத்தும்,மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்
ஜெ வினால் பதவியில் இருக்கக்கூடிய எந்த ஒரு அமைச்சர்களும்,சட்ட மன்ற உறுப்பினர்களும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல், அதாவது ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லையே என்று ..... மக்கள் கருத்து தெரிவிகின்றனர்.
ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜெ விற்கு உண்மை தொண்டர்களாக அஞ்சலி செலுத்திய காட்சியை பார்க்க முடிந்தது... ஆனால்,பதவியில் உள்ள ஆளும் கட்சியினர், ஆடையை மட்டும் கறுப்பாக அணிந்தார்களே தவிர,மனதில் அப்படி ஒன்றும் இறுக்கம் இருப்பது போன்ற தோற்றம் இல்லையே என அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்கள் பேசிக்கொள்வதை பார்க்க முடிந்தது...
இதன் மூலம் பதவி படுத்தும்பாடு என்ன என்பதையும், பதவி கண்ணை மறைத்து விட்டதா என்ற கேள்வியும் மக்கள் முன்வைக்கின்றனர்