இனி மழை வந்தாலும் ஸ்கூல் தான்..! அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘ரெயின் கோட்’..!

First Published Dec 5, 2017, 3:11 PM IST
Highlights
EDUCATION department decided to distributor rain coat to students


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ‘ரெயின் கோட்..

தமிழகத்தில் அவ்வப்போது மழை வருவதும், மழையால் பள்ளி மாணவர்கள் அதிகமாக  பாதிக்கப்பட்டு உடல் நிலை சரியில்லாமல் போவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது. இதன் காரணமாக பல நாட்கள்  பள்ளி செல்ல முடியாமல் மாணவர்கள் வீட்டில் இருந்தபடி ஓய்வில் இருப்பர்.

குறிப்பாக அதிகமாக மழை பெய்யும், மலை மாவட்டங்களில் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. இதை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ரெயின் கோட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வரும் 11ம் தேதி இதற்கான கொள்முதல் டெண்டர் இறுதி செய்யப்படும். 3.52 கோடி ரூபாய் செலவில் 1,17,236 ரெயின் கோட் வாங்கப்படும். 28 இன்ச் அளவில் 21,383 ரெயின் கோட், 30 இன்ச் அளவில் 23,832 ரெயின் கோட், 32 இன்ச் அளவில் 29,806 ரெயின் கோட், 34 இன்ச் அளவில் 42,215 ரெயின் கோட் வாங்கப்படவுள்ளது.

இந்த ரெயின் கோட் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, மதுரை, திருச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, நாமக்கல், சேலம், தேனி, மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் மக்கள் மத்தியில்  நல்ல  வரவேற்பை  பெற்று  உள்ளது 

click me!