எவனாவது சண்டியருன்னு குரூப் ஆரம்பிங்க எங்க இருந்தாலும் தூக்குவேன்... வாட்ஸ்அப்பில் ரவுடிகளை மிரட்டும் எஸ்ஐ!

By vinoth kumar  |  First Published Dec 16, 2018, 9:49 AM IST

தூத்துக்குடியில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ரவுடிகளுக்கு மிரட்டல் விடுக்கும் ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. 


தூத்துக்குடியில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ரவுடிகளுக்கு மிரட்டல் விடுக்கும் ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக போலீசார் மீது பாலியல் புகார், லஞ்ச புகார், ரவுடிகளுக்கு ரகசிய தகவல் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு புகார் எழுந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் போலீசார் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர். இந்நிலையில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா ரவுடிகளுக்கு மிரட்டல் விடுக்கும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக அந்த ஆடியோ பதிவில் நான் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா என தொடங்கி வருமாறு: ஏலே ஜவஹர்.. கற்பகராஜாவையும், ராஜதுரையையும் தூக்கிட்டேன்.. இரண்டு பேரும் என் கஷ்டடியில தான் இருக்காங்க, சண்டியருன்னு சொல்லி யாராவது குரூப் ஆரம்பிச்சீங்க.. கோவில்பட்டியில ஒருத்தன் இருக்க மாட்டீக, எல்லோத்தையும் ரிமாண்ட் பண்ணிடுவேன். நான் இசக்கிராஜா எஸ்.ஐ.புரியுதா. 

Tap to resize

Latest Videos

கொலை பண்ணிக்கிட்டு அலைஞ்சா பெரிய இவங்களா, இரண்டு பேரையும் தூக்கிடுவேன். (இருவர் பெயரையும் சொல்கிறார்) பொட்ட மாறி ஓடி ஓழிஞ்சு கிட்டு இருக்காங்க, மாரி, மாரி வெட்டுவாங்க, போலீஸ் என்ன மயிரை புடுங்கிட்டா இருக்கும். எவனாது குரூப் ஆரம்பிச்சிட்டு சுத்திகிட்டு எச்சிகல வேல பார்த்துட்டு அலைஞ்சிங்க, அவன் குடுக்கிற காசுக்கு வெட்டிகிட்டு அலைஞ்ச வம்பா சீரழிந்து போய்விடுவிங்க, உன் குடும்பத்தை காப்பாத்துற வழியப்பாருல, அவன் உனக்கு என்னல செஞ்சிட்டான்? (ஒருவர் பெயரைச் சொல்லி) என்ன நல்ல பயலா, அவன் ஒரு பொறுக்கிப்பய, இதுவரைக்கும் எத்தனை ரேப் பண்ணியிருக்கான், ஆனா போலீஸ்ல தப்பிச்சிட்டான், அதுக்கு தான் கடவுள் தண்டனை கொடுத்திருக்கான். 

(இருவர் பெயரைச் சொல்கிறார்) அவுங்களும் நல்லவங்க கிடையாது, ஆனா நான் அவங்கள வெட்டவிட மாட்டேன், புரியுதா, அவங்கள வெட்டவிட்டு நாங்க போலீஸ் இருக்கமாட்டோம், எவனாவது வந்திங்க நடக்கிறதே வேற. எவனாவது சண்டியருன்னு குரூப் ஆரம்பிங்க, ஆரம்பிச்ச அத்தனை பேரையும் தூக்குவேன், என்னல நினைச்சுக்கிட்டு இருக்கீங்க, கோவில்பட்டி ஊருக்குல்ல வந்து காசு கொடுத்து வெட்டுவான், அவனுக்கு வெட்டறதுக்கு திறமை கிடையாது. 

உங்களையெல்லாம் மூளை சலவை பண்ணி சாராயம் வாங்கி கொடுத்து, செலவுக்கு காசு கொடுத்து, வைச்சிருக்கான். எப்படியும் இந்த ஆடியோவை அனுப்புவீங்கன்னு தெரியும், அவங்கிட்ட சொல்லிரு, நான் கோவில்பட்டியில இருக்கற வரைக்கும், அவன் அருவா பிடிச்சு, ஆனா அவன் அருவா பிடிக்கமாட்டான், கூலிப்படையை வைச்சு, செய்யனுன்னு நினைச்சான், என்னாவான்னு தெரியாது, இசக்கிராஜா என்ன பண்ணுவான்னு சொல்லிரு, இந்த ஆடியோவை இரண்டு பேருக்கும் அனுப்பு, இசக்கிராஜா அனுப்பி இருக்காருன்னு சொல்லு. அவனுக்கு அவ்வளவு தைரியமா, சிக்குவான், எங்க இருந்தாலும் தூக்குவேன், கூடிய விரைவில் தூக்குவேன், தூக்குரன இல்லாயான்னு பாருல. எவனாவது அடுத்த குரூப் ஆரம்பிச்சிங்க உங்கள தொலைச்சு போடுவேன், தொலைச்சு போடுவேன், தொலைச்சு சொல்லிபுட்டேன், இந்த குரூப்புல எவனும் இருக்க கூடாது. இத்துடன் ஆடியோ முடிகிறது. இந்த ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.

click me!