நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க? அரசுக்கு நீதிபதி கேள்வி

 
Published : Sep 22, 2017, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:12 AM IST
நீதிபதியை விமர்சித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க? அரசுக்கு நீதிபதி கேள்வி

சுருக்கம்

what type of action taken against social media activists criticized judge

ஆசிரியர்கள் போராட்டம் குறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்,  ஜாக்டோ ஜியோ - ஆசிரியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த அரசியல் கட்சிகள், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து எந்தக் கேள்வியும் எழுப்பாதது ஏன் என கேள்வி எழுப்பினார். 

அவர் மேலும், கன்னியாகுமரியில் பள்ளிக்கு வந்த மாணவர்களைத் திருப்பி அனுப்பிய ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசியல்வாதிகளை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது நீதித்துறைக்கு தாமதம் ஏன்? 
அரசு அதிகாரிகள் குறித்துக் கேள்விகள் கேட்பதால், நீதித்துறை மீதான விமர்சனங்களை ரசிக்கிறார்களா? 

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறையை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. சமூக இணைய தளங்களில் நீதிபதிகளை விமர்சித்தவர்கள் யார் எனக் கண்டறிய வேண்டும். 

ஹெல்மெட், டாஸ்மாக் குறித்த உத்தரவுகள் வெளியிட்ட போது, அவை தொடர்பாக என் மீது அதிகம் விமர்சிக்கப்பட்டது. இவ்வாறு விமர்சனம் செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அக்டோபார் 4ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் கூறினார்.

இதை அடுத்து, அரசுத் தரப்பில் எடுத்த நடவடிக்கை குறித்து அளிக்கப்பட்ட விளக்கத்தில்,  நீதித்துறையை விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, நெல்லையைச் சேர்ந்த முருகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.   

PREV
click me!

Recommended Stories

வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி