
திருப்பூரில் காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பாலியானார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட கார் ஓட்டுநர், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
‘நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து சொகுசு கார் ஒன்று கோவையை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இந்த சொகுசு காரில் ஓட்டுநர் உட்பட 6 பேர் பயணம் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தெக்கலூர் கோவை - ஈரோடு 6 வழிச்சாலையில் இந்த கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அதே வழியில் அரசு பேருந்து ஒன்றும் வந்து கொண்டிருந்தது.
திடீரென சொகுசு காரும் அரசு பேருந்தும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்து மோதிய வேகத்தில் கார் 50 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார் ஓட்டுநர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தில் பலியானவர்களின் விவரம் மற்றும் விலாசம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.