
வட்டி எத்தனை வகைப்படும்?அதில் நீங்கள்எந்த 'கேட்டகிரி'..?
கந்துவட்டி
கடனுக்கு பணத்தை கொடுக்து அதற்கு வடியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வட்டியாக பெறுவதே கந்து வட்டி என சொல்லலாம்.
இதில் எந்தெந்த முறையில் வட்டி வாங்கினால், எவ்வளவு காலத்திற்குள் திருப்பி தரவேண்டும். எவ்வளவு வட்டி தர வேண்டும்,எவ்வளவு தொகையை வட்டியை பெறலாம் என்பதை பார்க்கலாம்
மாதவட்டி
நீண்ட கால அடிப்படையில் கடன் பெறுபவர்களின் தேர்வு
வீடு மற்றும் நில பத்திரங்களை வைத்து கடன் பெறுதல்
ஒப்பந்தம்படி மாதம் தோறும் வட்டி கட்ட வேண்டும்
ஹவர் வட்டி
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் வட்டி கணக்கிடப்படும்
கடன் தொகை 12 மணி நேரம் மட்டுமே கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
ரன் வட்டி
மணிகணக்கில் தரப்படும் வட்டித்தொகை ரூ.10,000 கடனுக்கு ரூ.9500 கிடைக்கும்
நான்கு மணி நேரத்தில் கடனை திருப்பி செலுத்த வேண்டும்
மீட்டர்வட்டி
நடுத்தர மக்கள் அதிகம் வாங்கும் வட்டி இதுதான்
ரூ. 1,00,000 கடனுக்க ரூ.85,000 கிடைக்கும்
வாரம் ரூபாய் பத்தாயிரம் வீதம் 10 வராங்களில் செலுத்த வேண்டும்
கம்ப்யூட்டர் வட்டி
வாங்கிய கடனை ஒரே வாரத்தில் அடைக்க வேண்டும்
ரூ.10,000 கடன் வாங்கினால்,ரூ.8000 கிடைக்கும்
ரூ. 10,000 -ஐ ஒரே வாரத்தில் செலுத்த வேண்டும்
வார வட்டி
ரூ.2,000 முதல் ரூ.10,000 ஆயிரம் வரை கடன் கிடைக்கும்
கடன் தொகையில் 15 %பிடித்தம்
பத்து வாரங்களில் ரூ.1000 வீதம் செலுத்த வேண்டும்
இதுதவிர ஒரேநாளில் திருப்பி கொடுக்கும் வட்டியும் அடங்கும்.