அதிமுக, பாஜகவை போல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, மணிப்பூர் கலவரத்தில் வீணாக முட்டுக் கொடுக்காமல் நடந்த தவறை ஒத்துக் கொண்டு மிக துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என திமுக தெரிவித்துள்ளது.
முட்டுக்கொடுக்கவில்லை
கள்ளக்குறிச்சி பகுதியே மயான பூமியாக மாறியுள்ளது. ஒரே தெருவில் 30க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். விஷச்சாராய சாவு எண்ணிக்கை 50யை தொட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்ககூடும் என அச்சப்படவைக்கிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை திமுக பட்டியிலிட்டுள்ளது.
அதில், எடப்பாடி பழனிசாமி மாதிரி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை TVயில் பார்த்து தெரிந்துக்கொண்டேன் என்று எதையும் சமாளிக்கவுமில்லை என தெரிவித்துள்ளது. பாஜகவை போல மணிப்பூர் கலவரம் ரயில் விபத்து.., மாணவர்களின் வாழ்கையை நிர்மூலமாக்கிய நீட் தேர்வு மோசடி போன்ற எல்லா படுபாதக செயல்களுக்கும் முட்டுக் கொடுப்பதை போல முட்டுக் கொடுக்கவுமில்லை என தெரிவித்துள்ளது.
தமிழக அரசு செய்தது என்ன.?
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் களத்தில் அமைச்சர்கள் நிற்கிறார்கள், தவறிழைத்த காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம், தவறுக்கு துணை நின்ற மற்ற அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம், காவல்துறை தலைவர் உடனடியாக சம்பவ இடத்தில் விசாரணை, மிகத் துரிதமான முறையில் மருத்துவ நடவடிக்கைகள், கள்ளக்குறிச்சியில் தலைமை மருத்துவ இயக்குனர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் என தமிழக அரசு செயல்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள திமுக, விஷச்சாராய மரணம் எப்படி நடந்தது என்பதை அறிய ஒரு நபர் கமிசன் என மக்கள் துயரில் பங்கு கொள்ளும் அரசு என தெரிவித்துள்ளது. வீணான முட்டுக் கொடுக்காமல் நடந்த தவறை ஒத்துக் கொண்டு மிக துரிதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளது.
Kallakurichi : விஷச்சாராய மரணம்..! சட்டசபைக்குள் அதிமுக அமளி - குண்டுகட்டாக வெளியேற்றம்