
கொடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது என்பது குறித்து நீலகிரி எஸ்.பி.முரளி ரம்பா செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது
கொடநாடு எஸ்டேட்டில் அதிக அளவு பணம் இருப்பதாக கனகராஜ் கூறியுள்ளார்.
மேலும் பங்களாவில் சிசிடிவி கேமரா, நாய் இல்லை என கொள்ளையர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்கள் 3 கார்களில் போலி பதிவேன் அட்டை வைத்து எஸ்டேட் பகுதிக்கு சென்றனர்.
கேட் எண்.8 ல் இருந்த காவலாளி ஓம்பகதூரை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு உள்ளே சென்றனர்.
உள்ளே சென்ற கொள்ளையர்கள் பங்களாவின் ஜன்னல் கதவுகளை உடைத்து சென்று ஜெயலலிதா சசிகலா பயன்படுத்திய 5 கை கடிகாரங்களை திருடினர்.
பணம் ஏதும் கிடைக்கததால் 5 கடிகாரங்கள் மற்றும் கிரிஷ்டல்களை திருடியுள்ளனர்.
இது தொடர்பாக 11 பேரில் 4 பேரை கைது செய்துள்ளோம்.
தீபு, சதீசன், சந்தோஷ், உதயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் மேலும் 5 பேர் தலைமறைவாக உள்ளனர்.
வழக்கில் தொடர்புடைய காமராஜ் உயிரிழந்துவிட்டார். சயான் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொள்ளையடித்த பின் 6 பேர் காரில் கூடலூர் தப்பி சென்றுள்ளனர். மற்ற கொள்ளையர்கள் பேருந்தில் தப்பி சென்றுள்ளனர்.
அதில் கனகராஜ் விபத்தில் உயிரிழந்து விட்டார். சயான் கார் விபத்து தொடர்பாக கேரள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.