ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த திட்டங்கள் என்னென்ன?

ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
 

What are the projects launched by Prime Minister Modi in Rameswaram? ray

Prime Minister Modi in Rameshwaram: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பனில் கடல் நடுவே ரூ.550 கோடி செலவில் புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. பழைய பாம்பன் ரயில் பாலத்தில் அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டதால் ராமேஸ்வரம் பாம்பன் இடையே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார். 

இந்த ரயில் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இலங்கையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சரத்குமார். ஜி.கே.வாசன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார்.

Latest Videos

இதன்பிறகு தமிழர்களின் பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டை அணிந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி, ராமரை மனமுருகி வழிபட்டார். கோயிலின் சிவாச்சாரியார்கள், நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். ராம நவமியையொட்டி கோவிலின் சிறிது நேரம் அமர்ந்து பிரதமர் மோடி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் தீர்த்தம் வழங்கப்பட்டது.

ராமேஸ்வரம் - பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!

கோவில் தரிசனம் முடிந்த பிறகு பிரதமர் மோடி, அங்கு இருந்து பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ராமேஸ்வரம் பேருது நிலையம் அருகே அமைக்கப்பட்ட விழா மேடைக்கு வந்தார். கோவிலில் இருந்து விழா மேடை வரையிலும் பிரதமருக்கு பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி அவர்களை நோக்கி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதன்பிறகு பிரதமர் விழா மேடைக்கு வந்த நிலையில், தமிழக அரசு சார்பில் அமைசச்ர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன் திருவள்ளூவர் சிலையை பிரதமருக்கு பரிசளித்தனர். தொடர்ந்து தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் விழா தொடங்கிய நிலையில், ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் ராமேஸ்வரம் தாம்பரம் இடையிலான புதிய ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை பிரிவில் புதிய 4 வழிச்சாலை திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் விழுப்புரம் புதுச்சேரி இடையே அமைக்கப்பட்ட 4 வழிச்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். சோழபுரம் தஞ்சை 4 வழிச்சாலை திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். 

கடவுளே! நல்லபடியா வைப்பா! ராமநாத சுவாமி கோவிலில் மனமுருகி வேண்டிய பிரதமர் மோடி!

vuukle one pixel image
click me!