பிரதமர் மோடி பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார்.
பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழா
பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இலங்கையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு தமிழக ஆளுநர் ரவி, மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, வானதி சீனிவாசன், அண்ணாமலை, ஜி.கே.வாசன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். இதனையடுத்து சிறிது நேர ஓய்வுக்கு பிறகு பட்டு வேட்டி சட்டையோடு விழா நடைபெறும் பாம்பன் பாலம் வந்தடைந்தார். அவருக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் வரவேற்றனர்.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் - பாம்பன் பாலம் திறப்பு: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!
கொடியசைத்து துவங்கி வைத்த பிரதமர்
இதனையடுத்து பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தில் உள்ள மையப்பகுதி மேலே தூக்குவதையும் பார்வையிட்டார். அப்போது பாலத்திற்கு கீழே கடலோர காவல்படையின் கப்பல்கள் கடந்து சென்றது. இதனை கையசைத்து பிரதமர் மோடி ரசித்தார்.
ராமநாத சுவாமி திருக்கோவிலில் தரிசனம்
இதனையடுத்து ராம நவமியையொட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு செய்தார். சிறிது நேரம் தரையில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து ராமேஸ்வரத்தில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கும் விழாவுக்கு பிரதமர் மோடி சென்றார்.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து.! வெளியான முக்கிய அறிவிப்பு- காரணம் என்ன.?
பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி
இதனையடுத்து பிற்பகல் 3.30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்யவும் தீர்த்தத்தில் நீராவுடம் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.