
Pamban Rail Bridge Opening : ஆன்மிக தலமாக விளங்கும் ராமேஸ்வரத்திற்கு முக்கிய வழித்தடமாக இருப்பது ரயில் பாலமாகும். இந்த பாலத்தின் மூலமாக மட்டுமே ராமேஸ்வரத்திற்கு மக்கள் செல்ல முடியும். அந்த வகையில் 100 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பழுதடைந்தது. இதனையடுத்து புதிய பாலம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதன் படி கடந்த 2020ம் ஆண்டு முதல் புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. கொரோனா பாதிப்பு, கடல் காற்று மற்றும் சவாலான வானிலைக்கு மத்தியில் பாம்பன் புதிய பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு இறுதியில் முடிவடைந்தன.
550 கோடியில் பாம்பன் பாலம்
பாம்பனில் கடல் நடுவே ரூ.550 கோடி செலவில் புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. பாம்பன் புதிய பாலத்தில் 72.5 மீட்டர் நீளமுள்ள மையப் பகுதி உள்ளது. இதன் மூலம் கப்பல்கள் வந்த செல்வதற்காக ஏற்கனவே மனிதர்களால் மேலே உயர்த்தப்பட்ட பாலத்திற்கு பதிலாக இயந்திரம் மூலாமக 17 மீட்டர் உயரத்திற்கு பாலத்தை உயர்த்தும் வகையில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இலங்கையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார். அப்போது அவருக்கு தமிழக ஆளுநர் ரவி, மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சரத்குமார். ஜி.கே.வாசன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். இதனையடுத்து சிறிது நேர ஓய்வுக்கு பிறகு பட்டு வேட்டி சட்டையோடு விழா நடைபெறும் பாம்பன் பாலம் வந்தடைந்தார். அவருக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் வரவேற்றனர்.
பாம்பன் பாலத்தை கடந்த கடற்படை கப்பல்
இதனையடுத்து பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்தை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தில் உள்ள மையப்பகுதி மேலே தூக்குவதையும் பார்வையிட்டார். அப்போது பாலத்திற்கு கீழே கடலோர காவல்படையின் கப்பல்கள் கடந்து சென்றது. இதனை கையசைத்து ரசித்த பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு பிரதமர் மோடி சென்து தரிசனம் மேற்கொண்டார்.