பால் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய சிறப்பு நிபுணர் குழு - உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு!

First Published Jun 6, 2017, 6:40 PM IST
Highlights
welfare petition at the High Court branch to inspect the quality of dairy products


பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய சிறப்பு நிபுணர் குழு கோரி உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக குற்றம் சட்டபாட்டது. இதில் பால் கெட்டுபோகாமல் இருக்க வேதி பொருட்களை கலப்பதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதனையடுத்து 5 மாத ஆய்விற்கு பிறகு பாலில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  இருந்தும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதால் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜூ என்பவர் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

பால் மற்றும் பால் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய சிறப்பு நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த பொதுநல மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துகொள்வதாக உயரிநீதிமன்ற கிளை அறிவித்திருந்தது. 

அதன்படி பால் கலப்பட  விவகராம் மிகவும் முக்கியமானது என்று கூறி மேலும் இது தொடர்பாக 2 வாரங்களில் தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு விசாரனையை வருகிற 19 தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்மன்றம் உத்தரவிட்டுள்ளது.

click me!