வடிவேலு, பார்த்திபன் ஒரே ரகளைதான்!இணையத்தில் வைரலாகும் வேற லெவல் திருமண அழைப்பிதழ்! நீங்க பார்த்தா சிரிப்பீங்க

By vinoth kumar  |  First Published Aug 26, 2022, 7:04 AM IST

நடிகர் வடிவேலு, இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன், பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஆகியோரை வைத்து செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 


நடிகர் வடிவேலு, இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன், பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஆகியோரை வைத்து செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சமீப காலமாக பாஸ்போர்ட் , ரேஷன் அட்டை, மாத்திரை அட்டை போன்று திருமண பத்திரிகை அச்சிடும் பாணி கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், நடிகர் வடிவேலு, இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன், பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஆகியோரை வைத்து செய்யப்பட்ட திருமண அழைப்பிதழ் ஒன்று வைரலாகி வருகிறது. 

Tap to resize

Latest Videos

இந்த திருமண பத்திரிக்கையின் ஆரம்பத்தில் 

வடிவேலு: "வாடா ரஞ்சித், இது என்ன கையில? 

மாப்பிள்ளை: எனக்கு கல்பாணம்னே...

வடிவேலு: என்னடா சொல்ற?... எங்கே எப்போ?

மாப்பிள்ளை: நம்ம மதுரைல நானே. செப்டம்பர் 5ம் தேதி காலையில 9.15 டூ 10.15 முகூர்தம். வசந்த நாள் JRT மஹால்ல. கண்டிப்பா வந்துருங்கண்ணே...

ஆனந்த் சீனிவாசன்: தம்பி.. கல்யாணம் பண்றதுக்கு சேவிங்ஸ் ரொம்ப முக்கியம். நல்லா யோசிச்சுக்கோ.

மாப்பிள்ளை: அட உங்கள மாதிரி சொந்தபந்தங்கள் நட்புகள் தான் என்னோட சேவிங்கஸ்.

பார்த்திபன்: எல்லாம் ஒகே. நீங்க ஏன் கல்யாணத்தை Non Linearல பண்ணக் கூடாது?

பிரபல யூடியூபர்களான கோபி மற்றும் சுதாகர்: 90ஸ் kidsக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதே பெருசு. இதுல இதெல்லாம் தேவையா சார்?

திருமணத்திற்கு அழைக்கும் வசனம்:  சரி, சரி.. பத்திரிகைய பார்த்து சிரிச்சது போதும். கண்டிப்பா கல்யாணத்துக்கு வந்து இந்த சின்னஞ்சிறுசுகளை வாழ்த்திட்டு போங்க. திங்கட்கிழமை  ஆபீஸ் இருக்கு, லீவ் கிடைக்கல. தூரமா இருக்குனு கற்கால வசனமா உருட்ட வேணாம். கல்யாணதத்துல மீட் பண்ணுவோம். மறக்காம லைக், கமெண்ட், ஷேர் சப்ஸ்கிரைப் பண்ணிருங்க. (சாரி பழக்க தோஷத்துல சொல்லிப்புட்டேன்)

கூல் சுரேஷ் தம்பி: கடைசியா ஒரு வசனம்... "வெந்து தணிந்தது காடு" எல்லாரும் ரஞ்சித் கண்ணன் சகாய ஜெரின் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்துகளை போடு...

ஜாலியாக அச்சிடப்பட்டுள்ள இந்த திருமண பத்திரிக்கை, தற்போது இணையத்தில் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

click me!