சென்னையில் அதிகரிக்கும் கஞ்சா புழக்கம்... ஒரே நாளில் 34 வங்கி கணக்குகள் முடக்கம்... காவல்துறை அதிரடி!!

By Narendran SFirst Published Aug 25, 2022, 6:31 PM IST
Highlights

கஞ்சா மற்றும் போதைபொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் 908 குற்றவாளிகளின் வங்கி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஒரே நாளில் 34 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 

கஞ்சா மற்றும் போதைபொருட்கள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் 908 குற்றவாளிகளின் வங்கி விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஒரே நாளில் 34 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னையில் குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னையில் போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், கஞ்சா விற்பனை செய்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: முகத்தை பார்த்தே சாதி கண்டு பிடிப்பேன்.. பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அனுராதா சஸ்பெண்ட்

அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல், விற்பனை செய்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில், 1 கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, அவற்றை சட்ட ரீதியாக முடக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: பொறியியல் மாணவர்களுக்கு புதிய திட்டம்… அறிமுகம் செய்தது அண்ணா பல்கலைக்கழகம்!!

இதன் தொடர்ச்சியாக கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கைப்பற்றிய வழக்குகளில் தொடர்புடைய 1,351 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைதுசெய்யப்பட்ட 1,351 குற்றவாளிகளில் 908 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு, 470 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதேபோல் நேற்று (25.08.2022) ஒரே நாளில் 34 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில்  மொத்தம் 504 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 

click me!