மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி... வெளிநாட்டு மணலுக்கு லட்சகணக்கில் முன்பதிவு!

By sathish kFirst Published Sep 21, 2018, 5:55 PM IST
Highlights

தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் விற்பனை தொடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் இணையதளத்தில் முன்பதிவு செய்ய பல ஆயிரக் கணக்கானோர்  முயற்சித்ததால், வெப்சைட்  பாதிக்கப்பட்டது.

வெளிநாட்டு மணல் விற்பனைக்கான தமிழக அரசின் இணையதளம் சமீபத்தில் முடங்கியது. அதன் பிறகு சில தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்ட பிறகு இந்த இணைய தளம் மீண்டும் செயல்பட தொடங்கி இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து இறக்குமதி ஆகி இருக்கும் இந்த மணலை பெற, ஆன் லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 

ஆன்லைனிலேயே பணமும் செலுத்தலாம். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல், இன்று மாலை 4 மணி முதல் ஆன்லைனில் முன் பதிவு செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த மணலை TNsand இணையதளத்திலும், கைபேசி செயலி மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.  முதல்கட்டமான துறைமுகத்தில் 11,000 யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட உள்ளது. 

எனவே ஆன்லைன் பதிவில் முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.  தற்போது முன்பதிவு செய்து விட்டால், அடுத்த வாரம் முதல் மணல் வழங்கப்படும். இந்த வெளிநாட்டு மணல் TNsandல் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் வழங்கப்படும். இந்த மணலின் விலை குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஒரு யூனிட்மணல் ரூ.9,990 ஆகும். 2 யூனிட் - ரூ.19,980-க்கும், 3 யூனிட் - ரூ.29,970-க்கும், 4 யூனிட் - ரூ.39,960-க்கும், 5 யூனிட் - ரூ.49,950-க்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

இதனால் அதிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த மணல் விற்பனைக்கான ஆன்லைன் தளத்தை, அதிக அளவிலான பயனர்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தி இருக்கின்றனர். இதனால் தான் தளம் முடங்கி இருக்கிறது. தற்போது இந்த குறைபாடு சரி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் மணல் வாங்குவோர் இந்த தளத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

click me!