Tamilnadu Rain update: அலர்ட்..! சென்னையில் மழைக்கு வாய்ப்பு.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..

Published : May 12, 2022, 02:48 PM ISTUpdated : May 12, 2022, 03:41 PM IST
Tamilnadu Rain update: அலர்ட்..! சென்னையில் மழைக்கு வாய்ப்பு.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்..

சுருக்கம்

Tamilnadu Rain update: நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” நேற்று காலை ஆந்திரபிரதேச கடலோரம்‌ அருகே மத்திய மேற்கு வங்கக்கடல்‌
பகுதிகளில்‌ நிலவிய “அசானி” புயல்‌ நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மரூலிப்பட்டினம்‌ அருகே கரையை கடந்தது. இது இன்று (12.05.2022) காலை 05:30 மணி அளவில்‌ காற்றமுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினத்துற்கு மேற்கே நிலவியது. இது இன்று காலை 08:30 மணி அளவில்‌ மேலும்‌ வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில்‌ நிலவுகிறது. இது படிப்படியாக மேலும்‌ வலுவிழக்கூடும்‌.

12.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

13.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

14.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருச்சி, பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

15.05.2022. 16.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ இல இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28
டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

மேலும் படிக்க: கோடை வெப்பம் எதிரொலி... பள்ளி நேரங்களை மாற்றியமைக்க மத்திய அரசு அறிவுறுத்தல்!!

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

12.05.2022: மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ தமிழக கடலோர பகுஇகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

ஆந்திர கடற்கரை பகுதி மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

13.05.2022: மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாளில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை... காரணம் இதுதான்!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

SIR படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்..!
இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி