சென்னையில் கல்லூரி உள்ளே கஞ்சா புகைத்த மாணவர்கள்.. போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய வீடியோ..!

Published : May 12, 2022, 01:56 PM IST
சென்னையில் கல்லூரி உள்ளே கஞ்சா புகைத்த மாணவர்கள்.. போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய வீடியோ..!

சுருக்கம்

சென்னை காமராஜர் சாலையில் மாநில கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கல்லூரி வளாகத்தின் நூலகத்திற்கு அருகே சில மாணவர்கள் கஞ்சா அடித்து வந்தனர். இதை கண்ட பேராசிரியர் ஒருவர் கஞ்சா அடிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் கஞ்சா புகைத்த 3 மாணவர்களை வீடியோ ஆதாரத்துடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பெரும்பாலான குற்ற சம்பவங்கள் கஞ்சாவை முன்வைத்தே நடக்கிறது. ஆகையால், கஞ்சாவை ஒழிக்க  காவல் துறை சிறப்பு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த தேடுதல் வேட்டை நடந்தாலும், தலைநகர் சென்னை மற்றம் புறநகர் பகுதியில் தான் அதிக அளவில் கஞ்சா வேட்டையில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையில் மாநில கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கல்லூரி வளாகத்தின் நூலகத்திற்கு அருகே சில மாணவர்கள் கஞ்சா அடித்து வந்தனர். இதை கண்ட பேராசிரியர் ஒருவர் கஞ்சா அடிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.

பின்னர் எடுத்த வீடியோவை அண்ணா சதுக்கம் போலீசாருக்கு பேராசிரியர் அனுப்பி வைத்தார். இதனையடுத்து போலீசார் கல்லூரிக்கு விரைந்து கஞ்சா அடித்த மூன்று மாணவர்களை பிடித்து விசாரித்த போது, இரண்டாம் ஆண்டு படித்து வரக்கூடிய சுனில் குமார்,  முதலாம் ஆண்டு படிக்கக்கூடிய தினேஷ் குமார் மற்றும் தனுஷ் என்பது தெரியவந்தது. இவர்களிடம் கல்லூரி நிர்வாகம் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!