எங்கள் பகுதியில் சாராயக் கடை அமைக்க மாட்டோம்னு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் வரை போராடுவோம்…

Asianet News Tamil  
Published : May 23, 2017, 09:39 AM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
எங்கள் பகுதியில் சாராயக் கடை அமைக்க மாட்டோம்னு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் வரை போராடுவோம்…

சுருக்கம்

We will fight for writing in our area without writing a documentary ...

திருப்பூர்

பல்லடத்தில் சாராயக் கடை அமைக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும் வரை போராடுவோம் என்று ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்திய மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம்புதூர் ஊராட்சிக்கு உள்பட்டது ஆலுத்துப்பாளையம்.

இந்தப் பகுதியில் புதிதாக சாராய்டக் கடை திறக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை அறிந்த அப்பகுதியில் சாராயக் கடையை திறந்தால் எங்களின் அமைதி சீர்குலையும், பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும், குடிகாரர்கள் குடிச்சிட்டு சாலையிலேயே படுத்து எங்கள் பகுதியில் உள்ள வளரும் சமூகத்தையும் சீரழித்துவிடுவார்கள்.

எனவே, எங்கள் பகுதியில் சாராயக் கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று அப்பகுதி மக்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்தப் போராட்டம் நேற்று ஐந்தாவது நாளாக தொடர்ந்தது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியது: “எங்கள் பகுதியில் சாராயக் கடை அமைக்க மாட்டோம் என்று டாஸ்மாக் சாராயக் கடை அலுவலர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும். அதுவரை எங்களின் காத்திருப்புப் போராட்டம் தொடரும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

Rahul Gandhi and Vijay: தமிழகத்தின் 'GOAT' கூட்டணி: ராகுல் - விஜய் கைகோர்ப்பில் உருவான அரசியல் அதிரடி!
TN New Govt: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? 500 யூனிட்டுக்கு மேல் இருந்தால் என்ன நிலை? தமிழக அரசு விளக்கம்!