
மக்களை பாதிப்பது போல் நாங்கள் எந்த போராட்டமும் நடத்தவில்லை, அதனால் எஸ்மா சட்டத்தை கண்டு எங்களுக்கு பயமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ மேற்படிப்பில் 50 % இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.
இதுகுறித்து மருத்துவர்கள் ரத்தை தடை செய்து உத்தரவிட்டகோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேவை பட்டால் எஸ்மா சட்டத்தை பயன்படுத்துங்கள் என்று கருத்து தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ சங்க செயலாளர் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அரசு மருத்துவர்களாகிய நாங்கள் 17 நாட்களாக போராடி வருகிறோம். முதல் நாளிலேயே எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றியிருந்தால் இதுபோன்ற நிலைகள் தொடர்ந்திருக்காது.மக்கள் பாதிக்கிற மாறி எந்த போராட்டமும் நாங்கள் நடத்தவில்லை.
குறிப்பிட்ட மருத்துவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். மற்ற மருத்துவர்கள் பணியை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
எஸ்மா, கிஷ்மா சட்டத்தை கண்டு பயமில்லை.மக்கள் நலனை கருத்தில் கொண்டு நீதிமன்றங்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அதைவிட்டுவிட்டு மருத்துவர்கள் மீது எஸ்மா சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று பயமுறுத்துதல் கூடாது.நோயாளிகள் பாதிக்காமல் இருப்பது குறித்து மருத்துவர்கள் நாங்கள் தெளிவாக உள்ளோம்.
சுகாதாரத்துறை செயலாளர் எங்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். அதனால் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.பேச்சுவார்த்தைக்கு பிறகே எங்களது அடுத்தகட்ட முடிவு அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.