
மருத்துவ மேற்படிப்பில் 50 % இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.
இதுகுறித்து மருத்துவர்கள் ரத்தை தடை செய்து உத்தரவிட்டகோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் இரு வேறு மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டனர்.
இதனால் மருத்துவர்கள் போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
அதன்படி இன்று ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜரானார். உயர்நீதிமன்றத்தில் ஆஜரான பின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அத்தியாவசிய பணிகள் பராமரிப்பு சட்டம் என்பதே எஸ்மா.எஸ்மா சட்டப்படி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்து 6 மாதங்கள் சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளது.
தேவை பட்டால் எஸ்மா சட்டத்தை பயன்படுத்துங்கள் என கூறியுள்ளனர்.மருத்துவர்கள் போராட்டாத்தால் நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
4 லட்சம் புற நோயாளிகலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.சேவை பாதிக்காத வகையில் குறிப்பிட்ட மருத்துவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.மாநில அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விவரித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.