"நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவன்".. 232 தொகுதியில் "என் மண் என் மக்கள் யாத்திரை" - அண்ணாமலை பகிர்ந்த Video

Ansgar R |  
Published : Feb 25, 2024, 07:37 PM IST
"நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டவன்".. 232 தொகுதியில் "என் மண் என் மக்கள் யாத்திரை" - அண்ணாமலை பகிர்ந்த Video

சுருக்கம்

BJP Leader Annamalai : நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டு கால சாதனையை மக்களுக்கு அறிவிக்கும் விதமாக "என் மண் என் மக்கள்" என்ற யாத்திரையை பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்றைய தினம் மதுராந்தகம் தொகுதியில் நடந்த "என் மகன் என் மக்கள்" யாத்திரை நடத்தியதன் மூலம், தமிழகத்தின் 232வது சட்டசபை தொகுதியை கடந்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் திரு கே. அண்ணாமலை அவர்கள் இன்று வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்

இந்த என் மனம் என் மக்கள் யாத்திரையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து அவர் தொடங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமை தங்கியது குறிப்பிடத்தக்கது. தினமும் ஒரு தொகுதியில் பொது கூட்டத்தை நடத்தி மக்களை சந்தித்து பேசி வருகிறார் திரு. அண்ணாமலை.

எடப்பாடியை நம்பாதீங்க.. டெபாசிட் காலி.. பாஜக + அதிமுக கூட்டணியை உறுதி செய்த ஓபிஎஸ்..

கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி உத்தமேரூர், காஞ்சிபுரம், பூந்தமல்லி ஆகிய தொகுதிகளில் கூட்டத்தை நடத்திய அவர், தற்பொழுது மதுராந்தகத்தில் யாத்திரையை நடத்தி முடித்துள்ளார். இது மட்டுமில்லாமல் நாளை மறுநாள் பிப்ரவரி 27ஆம் தேதி திருப்பூரில் 233 மற்றும் 234வது தொகுதியை கடக்க இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். 

இந்த கடுமையான பயணத்தில் தனக்கு ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை உறுதுணையாக நின்ற பொதுமக்கள், இளைஞர்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து மிகப் பெரிய எழுச்சி ஒன்றை ஏற்படுத்தி இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். தமிழக அரசியலில் இத்தனை ஆண்டு காலமாக எதிர்பார்த்த மாற்றமானது நிச்சயம் இந்த 2024 ஆம் ஆண்டில் நடைபெறும் என்றும் அவர் சூளுரைத்தார். 

இது அண்ணாமலையின் யாத்திரையோ, அல்லது பாரதிய ஜனதா கட்சியின் ஒரு யாத்திரையோ அல்ல, மாறாக இது உங்களுடைய யாத்திரை. மக்கள் இயக்கமாக எழுச்சி மிகுந்த ஒரு பயணமாக நாளை நமது என்ற நம்பிக்கையோடு நமது எண்ணங்கள் இருக்க வேண்டும் என்று அவர் தனது பதிவில் கூறியுள்ளார். அவர் பேசிய பல விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

திமுகவில் புரளும் போதைப்பொருள்.. அன்றே சொன்னோம்.. நடவடிக்கை எடுத்தே ஆகணும்.. அண்ணாமலை அதிரடி.!

PREV
click me!

Recommended Stories

இரண்டு ரெய்டுக்கு பயந்து அதிமுகவை அமித்ஷாவிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! நீயெல்லாம் பேசவே கூடாது.. அமைச்சர் ரகுபதி
தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்