
தென்மேற்குபருவ மழை முடிந்து தற்போது வட கிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளதால் தமிழகம் முழுவதும் மிதமான் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிக பட்சமாக நத்தம்,அருப்புக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் 7 செமீ, மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது
சென்னையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் இடைவெளி விட்டு மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது
வடகிழக்கு பருவ மழை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
மேலும் இடியுடன் கூடிய தொடர் கன மழை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் என வேதர்மேனும் தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
சாதாரண மழைக்கே சென்னையில் உள்ள பல இடங்களில் மழை நீர் தேங்குவதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கும் தருவாயில், மேலும் மழை தொடர்ந்து பெய்தால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
அதே வேளையில், விவசாயிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பெய்த மழை 31 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.