
தென்மேற்கு பருவ மழை காரணமாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது.அதனை தொடர்ந்து தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கி இருப்பதால் மழை தொடர்ந்து வர வாய்ப்பு உள்ளது. பொதுவாகவே சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பெய்த மழை 31 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது
இதனை தொடர்ந்து தற்போது வடகிழக்கு பருவ மழையால் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளில் தெருக்களில் மழை நீர் மட்டுமின்றி,சாக்கடை நீரும் சேர்ந்தே வீட்டிற்குள் நுழைகிறது என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்
மேலும் பாதை கூட தரமானதாக இல்லாததால்,எளிதில் சேதமடைந்து அதனால் ஆங்காங்கு பள்ளம் ஏற்பட்டு உள்ளதகாவும் மக்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்
சென்னையை பொறுத்தவரை ,பல இடங்களில் குறைந்த அளவில் மழை பெய்தாலே வீட்டிற்குள் மழை நீர் புகுவது வழக்கமாகி விட்டது
இதற்கெல்லாம் எப்போது தான் விடியும் காலம் வரும் என மக்கள் காத்திருக்கின்றனர்.இதற்கெல்லாம் முதற்காரணம் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்பதையே மக்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்