பள்ளிகளுக்கு எச்சரிக்கை... வளாகத்தை சுத்தமா வச்சுக்கங்க..! இல்லைனா அங்கீகாரம் ரத்தாகிடும்..!

 
Published : Oct 22, 2017, 01:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
பள்ளிகளுக்கு எச்சரிக்கை... வளாகத்தை சுத்தமா வச்சுக்கங்க..! இல்லைனா அங்கீகாரம் ரத்தாகிடும்..!

சுருக்கம்

warning to schools

டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் அளவிற்கு சுகாதாரமற்ற முறையில் வளாகங்களை வைத்திருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு தீவிரமாக உள்ளது. டெங்குவிற்கு குழந்தைகள் அதிகமான அளவில் பலியாகின்றனர். டெங்குவைத் தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் தூய்மைப் பணிகளும் கொசு ஒழிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொசு உற்பத்தியாகும் அளவுக்கு சுற்றுப்புறத்தை வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

அந்த வகையில், குழந்தைகள் அதிகநேரம் செலவிடும் பள்ளி வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்ட பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் பள்ளி வளாகங்களை தூய்மையற்ற சுகாதாரமற்ற முறையில் வைத்திருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார். மேலும் தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி வளாகங்கள் தூய்மையாக இல்லை என தெரிந்தால், 104 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு பெற்றோர் புகார் அளிக்கலாம் எனவும் குழந்தைசாமி தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு