
திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 போலி மருத்துவர்கள் உள்ளதாக ஆட்சித் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளளில் குவிந்து வருகின்றனர். மேலும் ஏராளமானோர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு காய்ச்சலால் உயிர் இழப்புகள் தொடரும் நிலையில், சுத்தம் கடைபிடிக்காமல், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வீடுகளுக்கு அபராதம் விதிக்க கோரி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் போலி மருத்துவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் உள்ளாட்சிகளின் அதிகாரிகள், வீடு தோறும் அதிரடி ஆய்வை துவக்கி உள்ளனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 போலி மருத்துவர்கள் உள்ளதாக ஆட்சித் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் போலி மருத்துவர்கள் 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். டாக்டரின் மருந்து சீட்டு இல்லாமல் மாத்திரை விற்ற 12 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.