
காஞ்சிபுரம் அருகே கோயில் பூசாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தை அடுத்த ஆர்பாக்கத்தில் கோயில் பூசாரியாக இருப்பவர் சந்தான கிருஷ்ணன். இவர் தினமும் காலையில் கோயிலுக்கு சென்று பூஜையை முடித்து விட்டு மதியம் வீடு திரும்புவது வழக்கம்.
வழக்கம்போல் இன்றும் காலை வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்றுள்ளார். பின்னர், வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 சவரன் நகை, 1 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.