
நாமக்கல்
ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். ராசிபுரம் வட்டார துணைத் தலைவர் சுரேஷ் வரவேற்றுப் பேசினார்.
அப்போது, “புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,
7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதில் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நாமக்கல் வட்டப் பொருளாளர் இளையராஜா நன்றித் தெரிவித்தார்.