
திருவல்லிக்கேணியில் இளைஞர் ஒருவர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவல்லிக்கேணி ரயில் நிலைய பகுதியில் துப்புரவு வேலை பார்த்து வந்தவர் மனோஜ். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் தினமும் வேலையை முடித்துவிட்டு கடற்கரை பகுதிக்கு தூங்க செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி இரவு 11 மணியளவில் சில மர்ம நபர்கள் மனோஜை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
தீப்பிடித்த மனோஜை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் குற்றவாளிகளை அடையாளம் கூறி விட்டு சிகிச்சை பலனின்றி மனோஜ் உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது சம்பந்தமாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.