
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் எனவும், ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றிருப்பது வரவேற்கதக்கது எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சேகர் என்பவர், ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டம் நடைபெற்றால் போக்குவரத்து மருத்துவம், கல்வி உள்ளிட்டவை ஸ்தம்பித்து விடும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் நிபந்தனைகளை முன் வைக்காமல் ஊழியர்கள் பணிக்கு திரும்பினால் வரும் தலைமைச் செயலரை நீதிமன்றத்துக்கே அழைத்து பேச்சுவார்த்தைக்கு உத்தரவிட தயார் என்றும் நீதிமன்றம் கூறியது.
இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர், போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் எனவும், ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றிருப்பது வரவேற்கதக்கது எனவும் தெரிவித்தார்.
எடப்பாடி தலைமையிலான அரசு மத்திய அரசுக்கு அடிமை பட்டு கிடக்கிறது எனவும், முறையான அறிவிப்புக்கு பின்னரே ஆசிரியர்களும் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்தார்.