
சேலம்:
சேலம் மாவட்டத்தில், வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இறக்க வைட்டமின் – ஏ தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டது உலக சுகாதார நிறுவனம்.
இந்தியாவில், நிமோனியா காய்ச்சல், தொடர் வயிற்றுபோக்கு காரணமாகவே, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அதிக அளவில் இறக்க நேரிடுகிறது. அதற்கு, வைட்டமின், 'ஏ' சத்து குறைபாடே காரணம் என்று உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்துள்ளது.
எனவே, தமிழகத்தில், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, வைட்டமின் 'ஏ' திரவம், இலவசமாக வழங்கப்படுகிறது. பிறந்த ஆறு மாதங்கள் முதல் 60 மாதம் அதாவது ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின், 'ஏ' சத்து ஊட்டப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில், 2,696 அங்கன்வாடி மையங்களில் பயிலும், 2.75 இலட்சம் குழந்தைகளுக்கு, வைட்டமின், 'ஏ' சத்து திரவம் ஊட்டும் பணி நடந்து வருகிறது.
இதுதவிர, அங்கன்வாடி மையம் வராத, 25 ஆயிரம் குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது.
சுகாதார பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, “வைட்டமின், 'ஏ' சத்து திரவம் உட்கொள்வதன் மூலம், மாலைக்கண் நோய் பாதிப்பு அறவே தடுக்கப்படும். அத்துடன், நிமோனியா காய்ச்சல், வயிற்றுப் போக்கும் வராது.
மஞ்சள் வண்ணமுள்ள ஆரஞ்சு, கேரட், பப்பாளி மற்றும் உருளை கிழங்கு, முட்டை, தக்காளி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். மீன் அதிகம் சாப்பிடலாம்.
குறிப்பாக, அம்மை நோய் பாதித்த குழந்தைகளுக்கு, வைட்டமின், 'ஏ' திரவசத்து, கண்டிப்பாக ஊட்ட வேண்டும்.
இத்தகைய நடவடிக்கை மூலம், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை இறப்பை அறவே தடுக்க, சுகாதாரத்துறை மூலம், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி, பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார்.