பாதுகாப்பு பணிக்காக வருகை தரும் துணை இராணுவப்படையினர்…

 
Published : Nov 09, 2016, 02:27 AM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
பாதுகாப்பு பணிக்காக வருகை தரும் துணை இராணுவப்படையினர்…

சுருக்கம்

தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு நாளை அல்லது நாளை மறுநாள் துணை இராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்காக அரவக்குறிச்சிக்கு வர இருக்கின்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் வருகிற 19–ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடக்கிறது.

தேர்தலை முன்னிட்டு அரவக்குறிச்சி தொகுதியில் 12 நிலையான கண்காணிப்பு குழுவினர் தொகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வாகன தணிக்கை நடத்தி வருகின்றனர்.

அதேபோன்று 12 பறக்கும் படைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்களும் தொகுதி முழுவதும் இரவு – பகலென சுற்றுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் உள்ள காவலாளர்கள், ஆயுதப்படை பிரிவு காவலாளர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு நாளை அல்லது நாளை மறுநாள் துணை இராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்காக அரவக்குறிச்சிக்கு வர இருக்கின்றனர்.

இந்த நிலையில் தேர்தல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் திங்கள்கிழமை கரூர் மாவட்ட காவல் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

இந்தக் கூட்டத்திற்கு காவல் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமை தாங்கினார். மத்திய மண்டல காவல் ஐ.ஜி. வரதராஜன் கலந்து கொண்டு தேர்தல் பாதுகாப்பு, சுற்றுப் பணியில் எவ்வாறு ஈடுபடுதல் என்பது குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இதில் கூடுதல் காவல் சூப்பிரண்டு இளங்கோ, துணை சூப்பிரண்டு கும்மராஜா உள்பட காவல்  இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!
காங்கிரஸ்க்கு கிரீன் சிக்னல் கொடுத்த விஜய்..? போனிலேயே நடந்து முடிந்த டீல்.. கலக்கத்தில் திமுக