
கடலூரில் ஆசிரியர் அடித்ததால் காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர் சோனங்குப்பத்தைச் சேர்ந்த பொற்செழியனின் மகன் பிரதாப், நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த 3ஆம் தேதி பள்ளிக்கு சீருடை இல்லாமல் வந்த பிரதாப்பை, உடற்கல்வி ஆசிரியர் கன்னத்தில் அடித்ததால் மயங்கி கீழே விழுந்தார்.
இதனையடுத்து மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் பிரதாப்பின் காது கேட்கும் திறன் 80% அளவிற்கு குறைந்துள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். சம்பவத்தை கேள்விபட்டு அழுத அம்மாணவனின் தாய், தனது மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.