பள்ளி, கல்லூரி விளையாட்டு வீரர்கள் ஊக்கத்தொகை பெறலாம்..!! - விண்ணப்பம் இதோ..!!!

 
Published : Nov 09, 2016, 12:23 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
பள்ளி, கல்லூரி விளையாட்டு வீரர்கள் ஊக்கத்தொகை பெறலாம்..!! - விண்ணப்பம் இதோ..!!!

சுருக்கம்

பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அரசின் ஊக்கத்தொகையை பெறுவதற்கு ஒரு வாய்ப்பு.

 

இதற்காக விண்ணப்பிக்க மாணவர்கள், தேசிய அளவிலான பள்ளி விளையாட்டுக் குழுமம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கழகங்கள், இந்திய விளையாட்டு குழுமம் நடத்தும் போட்டிகள் அல்லது அகில இந்திய பல்கலைக் கழக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்க வேண்டும். 1.7.2015 முதல் 30.6.2016 ஆகிய காலக் கட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றால் தான் இதற்கான தகுதி பெறுவர்.

 

இதற்கான விண்ணப்ப படிவத்தின் விலை ரூ.10/- ஆகும். அனைத்து மாவட்டங்களில் உள்ள விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் இந்த விண்ணப்பதை விரும்புவர்கள் பெற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 30-11-2016 தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் தக்க சான்றிதழுடன் நேரில் சென்று சமர்பிக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். கல்லூரி பல்கலைக் கழக விளையாட்டு மாணவர்கள் என்றால் ரூ.13,000 வழங்கப்படும்.

PREV
click me!

Recommended Stories

ஊழல் திமுக கூட்டணியை வீழ்த்துவது உறுதி.. பாஜகவுக்கு எத்தனை சீட்? இபிஎஸ்-பியூஸ் கோயல் கூட்டாக பேட்டி!
சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?