தம்பிகளா..! ஆட்சியரின் அட்வைஸ்..! மாணவர்களின் ஹீரோவான கலெக்டர்..!

Published : Nov 29, 2021, 08:26 PM ISTUpdated : Nov 29, 2021, 08:29 PM IST
தம்பிகளா..! ஆட்சியரின் அட்வைஸ்..! மாணவர்களின் ஹீரோவான கலெக்டர்..!

சுருக்கம்

தொடர் மழையின் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர், தனது டிவிட்டரில் நன்றியெல்லாம் போதும் தம்பிகளா, சோஷியல் மீடியாவை மூடிவிட்டு,  சோஷியல் சைன்ஸ் புத்தகத்தை எடுத்துப்படிக்குமாறு  கலகலப்புடன் அறிவுரை வழங்கியுள்ளார்.  

வடகிழக்குபருவமழையையொட்டி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் , தனது மாவடத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.

ஆனால் சமீப காலமாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மட்டும் விடுமுறை அளிக்கும்போதெல்லாம் டிரெண்டாகி வருகிறார். மேலும் அவரை பின்தொடர்பவர்களுக்கும் , மாணவர்களுக்கும் ஹிரோவாக மாறியுள்ளார். ஆட்சியரின் குறும்பு பதில்களால், பல மாணவர்கள் மகிழ்ச்சியுடன் அவரது பதிவுகளை டேக் செய்து பதில் சொல்லி வருகின்றனர். உடனக்குடன் , மாணவர்களின் கமெண்டகளுக்கு பதிலளிப்பதால், தங்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைப்பாதிப்புகளையும் தாங்கள் படும் இடர்களையும் மாணவர்கள் கோரிக்கை வைக்கவும் தவறவில்லை.  

கடந்த நவம்பர் 25 ஆம் தேதி, தொடர் மழையின் காரணமாக அடுத்த நாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தார் விருதுநகர் மாவட்ட் ஆட்சியர் மேகநாத ரெட்டி.  அந்த விடுமுறையை அவர் வழங்கிய விதம், மாணவர்களை வெகுவும் கவர்ந்தது. தம்பிகளே, உங்கள் நெடும் பிரார்த்தனை நிறைவேறிவிட்டது. தொடர் மழையின் காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் உங்கள் வீட்டு பாடங்களை தவறாமல் முடிக்க வேண்டும். ஆசிரியர்கள் அதனை கவினிப்பார்கள் என்று அன்பு கண்டிப்புடன் கூறியிருந்தார்.  இந்த டீவிட் சமுக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டது.

அந்த நிலையில், தற்போது தொடர்மழையின் காரணமாக, நாளை (30.11.2021) விருதுநகர் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் இந்த பதிவினை டேக் செய்து மாணவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஆட்சியர் நகைப்புடன் தனது பதிலை பதிவிட்டுள்ளார். அதில் தம்பிகளா, நன்றியெல்லாம் போதும் எனக்கு, சொஷியல் மீடியாவை மூடிவிட்டு, சொஷியல் புத்தகத்தை எடுத்து படியுங்கள் என்றும் ஒழுங்காக உடகார்ந்து படிக்க வேண்டும், நாளைக்கு டெஸ்ட் இருக்கிறது என்றும் அன்பு கண்டிப்புடன் கூறியுள்ளார். 

 

இதற்கு மாணவர்கள் ஓகே சார் படித்து விடுகிறோம் என்றும் பார்ப்போம் தலைவரே என்றும் பதிலளித்து வருகின்றனர். தான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற கர்வம் இல்லாமல் நெட்டிசன்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு மட்டுமல்லாமல் எளிதில் அணுகக்கூடிய வகையில்  நெருங்கி பழகுபவர்களைப் போல் பதிலளித்து வரும் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது. தற்போது ஆட்சியரின் இந்த பதிவு சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!