விருதுநகர் கர்ப்பிணி பெண் உயிருக்கு ஆபத்தா... குழந்தையை காப்பாற்ற முடியுமா? மருத்துவர் சொல்வது என்ன?

By vinoth kumarFirst Published Dec 26, 2018, 3:14 PM IST
Highlights

ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் நிலை தமிழகத்தை உறைய வைத்துள்ளது. இந்நிலையில் அந்தப்பெண்ணின் உயிருக்கும், கருவிலிருக்கும் குழந்தையின் உயிருக்கும் என்னவாகுமோ? என கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தாய்க்கும் சேய்க்கும், சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் நிலை தமிழகத்தை உறைய வைத்துள்ளது. இந்நிலையில் அந்தப்பெண்ணின் உயிருக்கும், கருவிலிருக்கும் குழந்தையின் உயிருக்கும் என்னவாகுமோ? என கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தாய்க்கும் சேய்க்கும், சிகிச்சை அளிப்பதன் மூலம் அவர்களை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

விருதுநகர், சாத்தூர் பகுதியை கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்த கட்ட சிகிச்சைகள் குறித்து விருதுநகர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மேலாளர் சண்முக ராஜூ விளக்கியுள்ளார். ‘’பாதிக்கப்பட்ட பெண் 8 மாத கர்ப்பிணி. அவருக்கு ஹெச்ஐவி இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சாத்தூர் அரசு மருத்துவமனையில் 16ம் தேதி பரிசோதனை செய்திருக்கிறார்கள். 18ம் தேதியே கூட்டுச் சிகிச்சை மையம் இருக்கும் விருதுநகருக்கு வந்து விட்டார். வந்த உடனே நோய் எதிர்ப்பு அளவு எவ்வளவு இருக்கிறது என சோதித்தோம். 377 இருந்தது. 

அன்றைக்கே கூட்டு மருந்து சிகிச்சையை ஆரம்பித்து விட்டோம். மருந்து மாத்திரைகளை அவர் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் அவர் தனது வாழ்நாளை நீட்டிக்கலாம். அத்தோடு அவர் எட்டு மாத கர்ப்பிணி என்பதால் குழந்தைக்கும் பரவாமல் தடுக்க வேண்டும். மந்ருது, மாத்திரைகளைக் கொடுத்து குழந்தைக்கு பரவாமல் இருக்க நாங்கள் எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். சுகப்பிரசவத்திற்கே அனுமதிக்கலாம். அம்மாவோட ரத்தம் குழந்தையின் வாய், மூக்கு பகுதிகளில் சென்று விடாமல் குழந்தை பிறந்த அன்றிலிருந்தே நெவரப்பின் என்கிற மருந்தை கொடுக்க இருக்கிறோம். 

தாமதமாக 8 மாதத்தில் ஹெச்ஐவி இருப்பதை கண்டுபிடித்திருப்பதால் குழந்தைக்கு தொடர்ந்து 12 வாரங்கள் நிவரப்பின் மருந்தை கொடுப்போம். 45 நாட்களில் குழந்தையை பரிசோதித்து பார்ப்போம். அந்த பரிசோதனையில் பாஸிட்டிவா நெகட்டிவா என்பதை பொறுத்து அடுத்த கட்ட சிகிச்சைகள் குழந்தைக்கு அளிக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார். 
 

click me!