அன்று பேசிய அண்ணாமலையா இது.. குழப்பத்தில் பாஜக - அதிமுக நிர்வாகிகள்

Published : Aug 23, 2025, 11:12 AM IST
annamalai

சுருக்கம்

திமுகவை வீழ்த்தி எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவது நமது கடமை என்று அண்ணாமலை கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவது நமது கடமை. அடுத்த 8 மாதம் கடுமையாக உழைத்து ஒவ்வொரு வாக்கையும் சேகரிக்க வேண்டும் என்று அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுகவும் - பாஜகவும் ஒரே மேடையில் இருந்ததை அதிமுக பொதுச் செயலாளர் அரசியல் கலந்து பேசுவது வேதனையாக உள்ளது. பாஜக ஆட்சியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றெல்லாம் பார்க்கவில்லை. எதிரும், புதிருமாக இருந்தாலும் ஒரு அரசியல் தலைவரை மதிப்பது அரசியல் நாகரிகம். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி என்னுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை கட்சியிடம் சொல்ல முடியாது. நான் கட்சியின் தலைவராக இருந்தாலும், அடிப்படையில் நான் தொண்டன். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என மத்திய அரசு முடிவு செய்த பிறகு, மாநில பாஜக முழு ஒத்துழைப்பை கொடுப்பது கடமை. இதில், நாங்கள் அரசியல் கலக்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்புகிறேன். 

எதிரும், புதிருமாக இருந்தாலும் அரசியல் நாகரிகம் வேண்டும். ஒரு தலைவரை மதிப்பது தான் அரசியல் நாகரிகம். மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களின் விருப்பத்தின்படி கலைஞரின் நினைவிடத்திற்கு சென்றோம். அரசியல் கலக்காமல் பெருந்தன்மையோடு செயல்பட்டுள்ளோம். அரசியல் நாகரிகத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் கட்சியாக பாஜக உள்ளது. சித்தாந்த அடிப்படையில் பாஜகவும், திமுகவும் எதிரும், புதிருமாக பயணம் செய்து கொண்டு வருகிறோம்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, ஆட்சி இல்லாத போது ஒரு பேச்சு என பேசுகிறார். ஆட்சியில் இருக்கும்போது மத்திய அரசிடம் நிதிகளை பெற்று மாநில அரசாங்கம் செய்தது என பேசியவர் எடப்பாடி பழனிசாமி. திமுக ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கை விட என் மீது ஐந்து மடங்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிணற்றுத் தவளை போல எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு உள்ளார். 

எடப்பாடி பழனிசாமி அவர்களுடைய அரசியல் புரிதல் இப்படித்தான் உள்ளது. ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் சமரசம் செய்வது எனது வேலை கிடையாது. கடந்த 1980 ஆம் ஆண்டிலிருந்து அரசியல் சூழ்நிலை தற்போது தமிழகத்தில் இல்லை. மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வரவேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம் பெட்டர் பொலிடிகல் மெச்சூரிட்டியை எதிர்பார்க்கிறேன்.

நாளை ஜெயலலிதா அவர்களுக்கு இதுபோன்று விழா கொண்டாடும் போது, இதே போன்று ஈபிஎஸ் செயல்பட முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் முதலமைச்சராக வந்துள்ளார். ரகசிய உறவு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா? எடப்பாடி பழனிசாமி மனதில் எவ்வளவு அழுக்கு உள்ளது. அவரது மனதில் அவ்வளவு சாதிய வன்மம் உள்ளது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியானவரா? முதலமைச்சராக இருந்த ஒருவர் இவ்வாறு பேச முடியுமா?

எம்ஜிஆர் அவர்களுக்கு இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை கொண்டாட தவறியது (அதிமுக) நீங்கள் செய்த தவறு. கலைஞர் நாணய வெளியீட்டு விழாவை, கருணாநிதியின் புகழ் நாடு முழுவதும் பரவ திமுக பயன்படுத்திக் கொண்டார்கள் என்று என்டிஏ கூட்டணியில் உள்ள அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் வெளுத்து வாங்கினார். நேற்று நடந்த விழாவில் பேசிய அண்ணாமலை அப்படியே மாற்றி பேசியுள்ளது அதிமுக வட்டாரத்தில் மட்டுமல்ல, பாஜக வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று திருநெல்வேலியில் நடைபெற்ற குமரி மண்டல பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது, படையில் தளபதி எப்படித் தலைமை தாங்குகிறாரோ, அதுபோல தேர்தலில் பூத முகவர்கள் முன்னின்று செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதில் பூத் கமிட்டிகளுக்கே முக்கிய பங்கு உண்டு. தமிழகத்தில் 7 இடங்களில் மாநாடுகள் நடைபெறுகின்றன.

கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் மோடி நாட்டுக்காக உழைக்கிறார். அடுத்த 8 மாத காலம் நமக்கும் முக்கியம். திமுக ஆட்சியை அகற்றி, தே.மு.தி.க-வை வெற்றிபெறச் செய்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை ஆட்சியில் அமர்த்த வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக பாஜக மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து, பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று, ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர் செய்யப்பட்டனர். முதல்வருக்கு புதிய கல்வி கொள்கை, ஊழல் தடுப்பு சட்டம் என எதையும் பார்த்தாலும் பயம். அவரை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. 

மோடி தமிழக மக்களுக்கு பல பெருமைகளை ஏற்படுத்தினார். சமீபத்தில் சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவராக உயர்த்தியிருப்பது உதாரணம். மத்திய அரசின் சாதனைகளையும், திமுகவின் தோல்விகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு பூத் நிர்வாகிகளுக்கே உண்டு” என்று அண்ணாமலை கூறினார் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் வேறொரு பேச்சும், இந்த வாரம் வேறொரு பேச்சும் பேசியுள்ளார் அண்ணாமலை, ஏற்கனவே எடப்பாடி பழனிசாமியை தற்குறி பழனிசாமி என்றும் கூறியுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!