புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்களால் கடந்த 2018-ம் ஆண்டு வில்லேஜ் குக்கிங் சேனல் உருவாக்கப்பட்டது. இதை சுப்ரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்செல்வன், முத்து மாணிக்கம் ஆகியோருடன் பெரிதம்பியும் நடத்தி வருகிறார்.
வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியதம்பி தாத்தாவிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உதவ மறுத்ததாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து சுப்ரமணியன் வேலுச்சாமி விளக்கமளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்களால் கடந்த 2018-ம் ஆண்டு வில்லேஜ் குக்கிங் சேனல் உருவாக்கப்பட்டது. இதை சுப்ரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்செல்வன், முத்து மாணிக்கம் ஆகியோருடன் பெரிதம்பியும் நடத்தி வருகிறார். இந்த வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு 2.5 கோடிக்கும் மேல் சப்ஸ் கிரைபர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: School College Holiday: குட்நியூஸ்.! பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு வில்லேஜ் குக்கிங் சேனலில் சமைக்கும் பெரியதம்பி தாத்தாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததை அடுத்து தற்போது அவர் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே தாத்தாவின் இதய சிகிச்சைக்கு வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்தவர்கள் நெல்லைக்கு வந்த ராகுல் காந்தியிடம் உதவி கேட்டபோது அவர் மறுத்து விட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பரப்பி வந்தனர். ஆனால், இதனை வில்லேஜ் குக்கிங் சேனலின் நிர்வாகி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது முற்றிலும் பொய்! எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது! இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்!https://t.co/smhjYbt12o
— Subramanian Velusamy (@vstamilan)
இதுகுறித்து வில்லேஜ் குக்கிங் சேனலின் சுப்ரமணியன் வேலுச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இது முற்றிலும் பொய்! எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது! இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சி தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.