
அரியலூர்
அரியலூரில், ஆன்லைன் மூலம் சான்றிதழ் பரிந்துரை செய்ய மறுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில், உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் சான்றிதழ் பரிந்துரை செய்ய மறுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில், "ஆன்லைன் சான்றுகள் பரிந்துரை செய்ய கணினி,மோடம்,இன்டர்நெட் இணைப்பு மற்றும் அதற்கான செலவினத் தொகை வழங்காததற்கு கண்டனம் தெரிவிப்பது,
கிராம நிர்வாக அலுவலர்களுக்கென தனி ஊதியம் வழங்க வேண்டும்.
உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு முன்பு இருந்த நடைமுறையையே அமல்படுத்த வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காலவரையற்றப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர் கிராம நிர்வாக அலுவலர்கள்.
ஆன்லைன் சான்றிதழ் கேட்டு வருபவர்களிடம் பரிந்துரை செய்ய முடியாது என்று தெரிவித்து ஐம்பது கிராம நிர்வாக அலுவலர்கள் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்துள்ளனர்.