வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்றே கடைசி நாள் - தேர்தல் அதிகாரி அறிவிப்பு...

 
Published : Dec 15, 2017, 09:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்றே கடைசி நாள் - தேர்தல் அதிகாரி அறிவிப்பு...

சுருக்கம்

To add name to the voter list the last day to delete - Election official announcement ...

விருதுநகர்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களை செய்ய இன்றே கடைசி நாள் என்று வட்டாட்சியர் மற்றும் இராஜபாளையம் தொகுதி தேர்தல் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.     

விரூதுநகர் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் உத்தரவின்படி, விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாட்சியர் சரவணன் மற்றும் தொகுதி தேர்தல் பிரிவு அதிகாரி செய்திக்குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார்.

அந்த செய்திக்குறிப்பில், "2018 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 2018-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான சுருக்கத் திருத்தப் பணிகள் நடைப்பெற்று வந்தன.

இதற்கான காலக்கெடுவை இந்திய தேர்தல் ஆணையம் 2017 டிசம்பர் 15 வரை என நீட்டித்து உத்தரவிட்டது.     

2018-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் 2018 ஜனவரி 5-ல் வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது தற்போது, 2018 ஜனவரி 10-ஆக மாற்றப்பட்டுள்ளது.

மக்கள் டிசம்பர் 15-க்குள் (அதாவது இன்று) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்ய விண்ணப்பிக்கலாம் என்றும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!