
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வாங்க மறுத்ததால் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது.
போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இன்று இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியது. இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால், ஏற்கெனவே அறிவித்தபடி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் யாஸ்மின் பேகம் முன்னிலையில் கடந்த 2 நாட்களாக போக்குவரத்துக்கழக தொழிலாளர் பிரச்சனை குறித்து 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை, பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் அரசு பஸ் போக்குவரத்து கழக ஊழியர்கள் இன்றே வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிலுவை தொகை, பஞ்சப்படி ஆகியவை நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தன.
இதனையடுத்து, வேலைநிறுத்தம் தொடர்பான அறிக்கையை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வாங்க மறுத்ததால் தொழிற்சங்கங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது.