நீட் தேர்வுக்கு அவசர சட்டம் - முதல்வர் எடப்பாடியுடன் விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை!!

 
Published : Aug 13, 2017, 01:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
நீட் தேர்வுக்கு அவசர சட்டம் - முதல்வர் எடப்பாடியுடன் விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை!!

சுருக்கம்

vijayabaskar meeting with edappadi

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்களிப்பது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை அடுத்து, அவசர சட்டம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் சந்தித்து 

வருகின்றனர். தமிழகம், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுமா என்று மாணவர்களும், பெற்றோர்களும் கவலையடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னை, தாம்பரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மருத்துவ கல்லூரி இடங்களுக்கு மட்டும் நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்களிக்க ஒத்துழைப்பதாக அவர் கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சு, வரவேற்கத்தக்கது என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். 

அமைச்சர் விஜயபாஸ்கர், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து வரவேற்கத்தக்கது என்றார். இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்களிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது, தமிழகத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

இந்த நிலையில், சென்னை, கிரீன்வேஸ் இல்லத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு குறித்து அடுததகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனையில், ஊசாதார துறை செயலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!
திமுக அரசு அலட்சியத்தால் 9 பேர் பலி.. 'அந்த' நிதி எங்கே?.. கொந்தளித்த அண்ணாமலை!